பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7() திருப்பாவை விளக்கம்

சிறப்பும் ஒருங்கே அமைந்துள்ள இந்தப் பாசுரத்தில் இராமானுசர் ஆழங்கால்பட்டு நின்றார் என்பதற்கு ஐயமில்லை அன்றோ!

வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய்

என்று நப்பின்னைப் பிராட்டியைத் துயிலெழுப்பி, ஆய்க்குலப் பெண்கள் நலம் பெறும் வழியினை இந்தத் திருப்பாசுரம் நயம்பட வருணித்து நிற்கிறது எனலாம்.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தங் கமழுங் குழலி: கடைதிறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ

ரெம்பாவாய். (18)