பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருப்பாவை விளக்கம்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்.

கண்ணனிடம் கனிவோடு இரந்து வேண்டியும் கண்ணன் கருணை காட்டவில்லை என்பதனால் அவனோடு உடன் உறை வாழ்வு பெற்ற நப்பின்னையை இரந்து உய்தி பெறலாம் என்று கருதுகிறார்கள். மைதீட்டிய விசாலமான கண்களை உடையவளே” என்று அவள் கண்களைப் புகழ்கிறார்கள். ‘கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கண்டீர்’ என்பது இலக்கணம். எனவே உறுப்புகளிலேயே தலையாய சிறப்புப் பொருந்திய கண்களின் அழகினையே புகழத் தொடங்கி விட்டார்கள். “நப்பின்னையே! எவ்வளவு நாழிகை உன் கணவனோடு நீ கூடியிருந்தாலும் அவனை விட்டு அரைக்கணம் பிரிவதற்கும் கூடச் சம்மதிக்கவில்லையே! இவ்வாறு இருப்பது உனக்குத் தகுதியுடைய செயலன்று: உன்னால் ஒருகணம் உன் கணவனை விட்டுப் பிரிய முடியாது என்பது உண்மையானாலும் கூட, எங்கள் பொருட்டு மனம் இரங்கி அவனைத் தூக்கத்திலிருந்து விழித்தெழ வைத்து, எங்கள் குறையைக் கேட்க வைத்து, நாங்கள் எங்கள் குறையைப் போக்கிக் கொள்ள ஒரு வாய்ப்புத் தரலாம் என்று நப்பின்னையை வேண்டிக் கொள்கிறார்கள்.

மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.

இத்திருப்பாசுரத்தில பஞ்சு மெத்தையின் நேர்த்தி, மனம்

தொடும்படி வருணிக்கப்பட்டுள்ளது. பஞ்சு, பட்டு, கம்பளம், மலர், தளிர் என்ற ஐவகைப் பொருள்களால் ஆன படுக்கை