பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் /7。

பஞ்ச சயனம்’ எனப்படும். அழகு, வெண்மை, மென்மை, நறுமணம், குளிர்ச்சி ஆகிய ஐந்து சிறப்புகளை உடைய படுக்கை என்றும் கூறுவதுண்டு. மேலும் பஞ்ச சயனத்தின் மெத்தென்ற தன்மையாலும் மேன்மையாலும், பக்கத்தில் நப்பின்னை உறைவதனாலும் கண்ணன் கண் விழிக்கவில்லையோ என்றும், ஆய்ச்சியர் குரலுக்குச் செவி மடுத்து இரங்காமல் வாளாகிடத்தல் அவனுடைய தகுதிக்கும் இயல்புக்கும் உடன்பாடான பண்புகள் இல்லை என்பதும் இதனால் தெளிவாகின்றன.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய். (19)