பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. முப்பத்து மூவர்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச்

சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மைநீ ராட்டேலோ

ரெம்பாவாய்.

மேலைப் பாசுரத்தில் தத்துவமன்று தகவு என்று ஒர் அரிய வைணவக் கோட்பாட்டை - சித்தாந்தத்தை - நப்பின்னையின் செயல்மேல் வைத்துப் புலப்படுத்திய ஆயர்பாடிப் பெண்கள், இன்னும் கண்ணன் விழிக்காத நிலை கண்டு அவனைப் புகழும் நோக்கில் அவனுடைய பல்வேறு வீரதீரச் செயல்களை விளங்கச் சொல்லித் துயிலேழுப்ப முனைகிறார்கள்.

‘முப்பத்துமூன்று பேரை முக்கியமானவர்களாக உடைய தேவர்களுக்கு முன்னாலே சென்று படைநடத்திப் பகைவரிடையே தன்னுடைய வீரத்தை விளங்கக் காட்டித் தேவர்களின் நடுக்கத்தைத் தீர்த்துவைத்த பெருமிதமும் மிடுக்கும் வாய்ந்த அண்ணலே’ என்று முற்படக் கிளத்துகிறார்கள். இவ்வாறு அவன் வீரதீரத்தைச் சொல்லித் துயில் உணருமாறு வேண்டிக்கொள்கிறார்கள். அவன் துயிலுணர்ந்தபாடாகத் தெரியவில்லை. எனவே, மேலும் அவனைப் புகழத் தொடங்குகிறார்கள். ‘நேர்மை உடையவனே என்று அடுத்துப் பாராட்டினார்கள். அதன் மேலும் திறமை உடையவனே என்று புகழ்ந்தார்கள்.