பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 7.5

பகைவர்களுக்கு அச்சத்தை விளைவிக்கின்ற குற்றமற்ற கோமானே என்றும் சொல்லித் துயிலெழுப்ப முனைந்தார்கள்.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்.

இவ்வளவு புகழ்ந்து பேசியும் கண்ணனின் கருனைக் கண்கள் திறக்கவில்லை. எனவே மீண்டும் நப்பின்னையின் தயவினை நாடுகின்றார்கள். இப்பொழுது அவனை முன்னிலைப்படுத்திப் பாராட்டத் தொடங்குகிறார்கள். “அழகிய மார்பினையும், செக்கச் சிவந்த வாயினையும், துண்ணிய இடையினையும் கொண்ட நப்பின்னைப் பெண்னே’ என்று புகழ்ந்துரைத்தார்கள். “இலட்சுமி போன்றவளே” என்று அடுத்து மொழிந்தார்கள். “தூக்கத்தி லிருந்து விழிப்பாயாக’ என்றும் கேட்டுக்கொண்டார்கள். பாவை நோன்பிற்குப் பயன்படும் விசிறியினையும் கண்ணாடியினையும் வழங்கி இக்கணமே உன் கணவனை - கண்ணனை - மார்கழி நீராடுவதற்கு எழுப்பி அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்கள்.

செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச்

சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மைநீ ராட்டேலோ

ரெம்பாவாய்.

சென்ற திருப்பாசுரத்தில் நப்பின்னையின் உதவியை நயந்து

கேட்டும் அவள் உதவாத காரணத்தினால் அவள் போக்குக்கு, உதவாத பான்மை உரியதன்று என்னும் கருத்தில்