பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருப்பாவை விளக்கம்

‘தத்துவமன்று தகவு என்று நப்பின்னையைச் சாடிப் பேசிவிட்டவர்கள் இப்பொழுது சற்று வருந்துகிறார்கள். நப்பின்னையக் கோபித்துக் கொண்டது ஒருவேளை அவள் கணவனாகிய கண்ணனுக்கு வருத்தத்தைத் தந்திருக்குமோ? என்று எண்ணி இத்திருப்பாசுரத்தின் தொடக்கத்தில் முதற்கண் அவனையே புகழ்ந்து பேசினர். ஆயினும் அவன் பிடி கொடுக்கவில்லை. எனவே, ஆயர்குலப் பெண்கள், ஒரு பெண்தான் மற்றொரு பெண்ணின் மனத்தை நன்கறிய முடியும் என்றபடி மீண்டும் நப்பின்னையைப் புகழ்ந்து, தங்கள் குறை முடிக்க வேண்டுகிறார்கள். இதுவரை பறை ஒன்றையே கேட்டவர்கள். இந்தத் திருப்பாசுரத்தில் நோன்புக்கு உரிய கருவிகளான விசிறியினையும் கண்ணாடியினையும் கேட்கின்றார்கள். இவை மட்டும் தந்தால் போதாது. உன் மணாளனையும் உவந்து தந்து எங்களுடன் மார்கழி நீராட அனுப்பி வைக்க வேண்டும் என்கிறார்கள். இப்போதே என்ற சொல்லால் அவர்கள் காட்டும் விரைவு புலப்படுகின்றது. “நன்றே செய்யவும் வேண்டும். நன்றும் இன்றே செய்யவும் வேண்டும்” என்னும் கபிலரகவற் பாடல் இங்கு நினைக்கத்தக்கது.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா, துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச்

சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மைநீ ராட்டேலோ

ரெம்பாவாய். (20)