பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ஏற்ற கலங்கள்

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல்

பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ

ரெம்பாவாய்.

இறைவன் அடியவர்களின் ஆராத அன்புக்குக் கட்டுப்பட்டவன் அன்றோ! அதிலும் பெண்ணென்று சொல்லிடிலோ ஒரு பேயும் இரங்குமென்பார் என்னும் பாரதியின் கூற்றுப்படி, பெண்களல்லவா வேண்டு கின்றார்கள். எனவே, முதற்கண் நப்பின்னையின் அருளும் அவள் பரிந்துரைப்படி அவள் கணவனாம் கண்ணனின் அருளும் திருவாய்ப்பாடிப் பெண்களுக்குக் கிடைத்து விட்டன. மேலைப்பாசுரத்தில் இப்பொழுதே அருள வேண்டும் என்று கேட்டவர்களுக்கு ஒரு கணமும் தாமதியாமல் அக்கணமே கண்ணன் அருள் பாலித்து விட்டான் அன்றோ! எனவே, இத்திருப்பாசுரத்தில், அவன் வளர்ந்த ஆயர் குலத்தின் அருமை பெருமைகளை எல்லாம் அடுக்கிப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

கறந்த பாலை ஏற்றுக் கொள்ளும் கொள்ளளவு நிறைந்த பாத்திரங்கள் நிறைந்து மேலெழுந்து பொங்கி அளிக்கும் வகையில், மாறாத வகையில் பாலினைச் சொரிகின்ற வள்ளண்மை வாய்ந்த பெரும் பசுக்களைத் தன்னுடைய செல்வமாகப் பெற்றவன் நந்தகோபன், என்று