பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() திருப்பாவை விளக்கம்

கி.பி. ஆறாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைத் தமிழில் ‘பக்தி இயக்கக் காலம் என்பர். இக்காலத்தே நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்து பக்திப் பாடல்களைப் பாடி மக்கட் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தினர். இ.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பெரியாழ்வார் ரீவில்லிபுத்துரில் திருக்கோயில் கொண்டிரு க்கும் வடபத்தரசாயி என வழங்கும் வடபெரும் கோயிலுடையானிடத்தில் ஆராத அன்பு கொண்டு உருகினார். திருமால் பக்தியில் ஆழங்கால்பட்டுத் தோய்ந்த இவ்வாழ்வாரின் வளர்ப்பு மகளே கோதையென்றும், குடிக் கொடுத்த சுடர்க்கொடியென்றும், ஆண்டாள் என்றும் அன்போடு அழைக்கப்பெறும் திருப்பாவை பாடிய செந்தமிழ்ச் செல்வி கோதை நாச்சியார் ஆவர். இவர் திருப்பாவை முப்பது பாடல்களையும், நாச்சியார் திருமொழி நூற்று நாற்பத்து மூன்று பாடல்களையும் பாடியவர் ஆவர். திருப்பாவை ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை நாடும் சமயப் பொருண்மையை அடிப்படையாகக் கொண்டது. வைணவப் பெரியவராகிய பூரீ இராமாநுஜர் திருப்பாவையில் பெரிதும் ஈடுபட்ட காரணத்தினால் திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்பட்டார். வேதாந்த தேசிகரும் திருப்பாவையில் ஈடுபாடு கொண்டவர் ஆவர். விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயர் ‘ஆமுக்த மால்யதா’ என்னும் தெலுங்கு நூல்லில் ஆண்டாளைக் குறிப்பிட்டுள்ளார்.

பாவையர், பாவை பிடித்து வைத்துக் கொண்டாடிய பர்வை நோன்பை ஒட்டித் திருப்பாவை என்னும் பிரபந்தம் தோற்றம் கொண்டுள்ளது. இதனால் ‘பாவை பாடிய பாவை’ என்றும் ஆண்டாளைக் குறிப்பிடலாம். பாவைப் பிரபந்தத்தின் உள்ளிடாக, மழை பெய்து நாடு செழித்தலும், நோன்பு இருக்கும் மகளிர் நல்ல கணவனை அடைதலும் ஆகிய இரு பொருள்கள் ஏற்றம் கொண்டுள்ளன. மார்கழி