பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருப்பாவை விளக்கம்

பெண்கள் புகழ்கிறார்கள். மேலொரு பாசுரத்திலும் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்றார்கள். இந்தத் திருப்பாசுரத்திலும் பசுக்கள் பால்சொரிந்து ஆய்ப்பாடியின் செல்வவளத்தைச் செழிப்புறச் செய்வதனைக் காண்கிறோம்.

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல்

பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!

இத்தகைய பால்வளத்தால் பல்வளமும் பெற்றுச் செல்வத்தின் நாயகனான நந்தகோபாலனின் மகனே என்று. கண்ணனை அழைப்பதனால் அவன் வளரும் செல்வச் சூழ்நிலை புலப்படுத்தியவாறு கண்ணனே! நீ துயிலுணர்ந்து எழுந்திருக்க வேண்டும் என்கிறார்கள். அடுத்து, அடியவர்கள் பக்திக்கு ஆட்பட்டு அவர்களைக் காப்பதில் கருத்துரன்றி நிற்கும் திண்மை உடையவனே என்கிறார்கள். ‘பக்தி வலையில் படுபவன் கண்டாய்’ என்று ஆண்டவனை ஆன்றோர் குறிப்பிடுவர். அந்த வகையில் பெரியவனாக உயிர்களின் வருத்தம் போக்க உலகிலே அவதரித்தவனாக - நிலைபெற்றிருக்கும் தன்மையால் சுடர்மிகு சோதியாக - கண்ணன் - மணிவண்ணன் - விளங்குகின்றானாம். எனவே புகழ்ச்சிகளுக்கெல்லாம் வாய்ப்பாக - உறைவிடமாக விளங்குகின்ற எம்பெருமான் துயிலெழ வேண்டும் என்கிறார்கள்.

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!

பகைவர்கள் எவராயிருந்தாலும் அவர்கள் உன்முன் நிற்கும் பொழுது வலிமை அழிந்து உன் வாசலில் வந்து உன்