பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. அங்கண்மா ஞாலத்து

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல்

நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

உய்யும் வழியொன்றும் காணாமல் உன் கழல்களே சரணம் சரணம் என்று உன்னிடம் புகலடைந்தோம் என்று முன்னைய பாசுரத்தில் திருவாய்ப்பாடிப் பெண்கள் கண்ணனைச் சரணடைந்த திறத்தினைக் கண்டோம். இத்திருப்பாசுரத்தில் கண்ணனுடைய கணக்கிலாத ஆற்றலினையும் அரும்பண்புகளையும் தொகுத்துக் கூறுகிறார்கள் அவர்கள். இடமகன்ற இப்பெரிய உலகமே நம்முடையது என்று தருக்கில் திரிந்த அரசர்கள் அந்தத் தருக்கு நீங்கப் பெற்றவர்களாய் உன் பள்ளியறையில் நீ படுத்துக் கொண்டிருக்கும் கட்டிலுக்கு அருகில் கூட்டமாகக் கூடியிருப்பதுபோல், நாங்களும் உன் திருக்கல்யாண குணங்களில் ஈடுபட்டு, தோய்ந்து, எங்கள் சொந்த அபிமானம் நீங்கப் பெற்றவர்களாய் உன்னிடம் வந்து சேர்ந்தோம் என்கிறார்கள்.

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்.