பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருப்பாவை விளக்கம்

இவ்வாறு தங்கள் செருக்கு நீங்கியவர்கள் இறைவன் உலகை எட்டுவார்கள் என்னும் பொருள்படத் திருவள்ளுவர் பெருமான்,

‘யான் எனது என்னும் செருக்கறுப்பான்

வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.

என்று குறிப்பிட்டுள்ளார். கிண்கிணியின் வாய்போல் சிறிதே மலர்ந்திருக்கும் - தாமரைப் பூப்போல விளங்குகின்ற உன்னுடைய திருமுகத்திலே இருந்து அருள் பாலிக்கும் உன்னுடைய செக்கச் சிவந்த கண்கள் ஒரு சிறிதேனும் எங்கள் மேலே விழியாவோ, அவ்வாறு விழித்தால் அது ஆகாதோ? என்று கண்ணனுடைய கருணைக் கண்கள் தங்கள் மேல் பதிய வேண்டும் என்று இரங்கி ஏங்கிக் கேட்டுக் கொள்கிறார்கள்.

கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ.

இவ்வாறு இரந்து கேட்டும், கண்ணன் சிஞ்சித்தும் கருணை காட்டவில்லை. சந்திரனும், சூரியனும் ஒருசேர உதித்தது போல உன்னுடைய அழகைக் கண்டு திளைக்கும் எங்களை நோக்கிக் கண்கள் இரண்டனையும் கொண்டு கருணை காட்டுவாயாகில் எங்களை நீ கண்னெடுத்தும் பார்க்க வில்லை என்ற சாபம் தொலைந்து, நாங்கள் உய்வோம் என்று திருவாய்ப்பாடிப் பெண்கள் முத்தாய்ப்பாகப் பேசுகிறார்கள்.

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல்

நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.