பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 8,3

இங்குத் திங்களும் ஆதித்தியனும் என்று ஒரேயடியில் முரண்பட்ட இருபொருள்கள் இடம் பெற்றிருப்பது முரண்தொடை நயமாகும்.

சந்திரனும் சூரியனும் கண்ணனின் இரு கண்களாக இங்கே காட்டப்படுகின்றன. அவன் கண்களில் வெப்பமும் உண்டு; தட்பமும் உண்டு என்பதனை இது புலப்படுத்தும். மாற்றார். அவன் கண் வெப்பத்தால் தொலைகிறார்கள். அவனது அடியார் அவன் தட்பத்தால் குளிர்ந்து மகிழ்கிறார்கள். இவ்வாறு இத்திருபாசுரத்தில் கண்ணன் மாட்டுக் காதல் மீதுாரப் பெற்ற திருவாய்ப்பாடிப் பெண்கள், அவனை வாழ்த்துவதே தங்களுடைய வாழ்வாக அமைகிறது என்பதனைப் புலப்படுத்தியிருக்கக் காணலாம்.

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல்

நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ

ரெம்பாவாய். (22)