பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 8.5

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே.

ஒரு பெண்பாற் கவிஞரான ஆண்டாள் எவரும் அரிதில் காணமுடியாத மலைக் குகைக்குள்ளே நடைபெறும் ஒரு காட்சியினை மாட்சிமைப்பட வருணித்திருப்பது உளம் உவந்து பாராட்டத்தக்கதாகும்.

இந்தச் சிங்கத்தின் சிறப்புக் காட்சியினைத் திருவாய்ப்பாடிப் பெண்கள் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. கண்ணனும் அவ்வாறு புறப்பட்டு வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வார் போல, இச் சிங்க வருணனையை முன்வைக்கின்றார்கள்.

“கண்ணனே! காயம்பூ வண்ணனே உன்னுடைய திருக்கோயிலிலிருந்து, சிங்கம் எவ்வாறு தன் குகையிலிருந்து ஆண்மையோங்கப் புறப்பட்டதோ அதுபோல நீயும் நாங்கள் இருக்கும் இடத்திற்கு எழுந்தருளி, வேலைப்பாடுகள் மிக்க, சிறப்பு மிக்க இந்தச் சிங்காசனத்தில் வீற்றிருப்பாயாக. அவ்வாறு ராஜகம்பீரத்தோடு நீ வீற்றிருந்து நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டு ஆராய்ந்து எங்களுக்கு அருள் பாலிப்பாயாக!'என்று கேட்டுக் கொள்கின்றார்கள். ஆய்ச்சியர் குடிப்பெண்கள் தங்கள் குறையைக் கேட்க வேண்டுமென்று கண்ணனிடம் கூறுகின்றார்களே ஒழியத் தங்கள் குறை இன்னதென்று வெளிப்படையாக இல்லா விட்டாலும், குறிப்பாகக் கூடக் கூறமுற்படவில்லை என்பது தெரியவரும்.