பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருப்பாவை விளக்கம்

பூவைப்பூ வண்ணா உன் கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக்

கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

ஆய்ச்சியர்கள், மலைக்குகையில் வதியும் சிங்கம் விழித்தெழுந்து கம்பீரத்தோடு புறப்பட்டு வெளிவருவது போல, யசோதை வளர்க்கும் இளங்சிங்கமும் தன் இருப்பிடத்தை விட்டுப் புறப்பட்டு வர வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றார்கள்.

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல்

நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ

ரெம்பாவாய். (23)