பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அன்று இவ்வுலகம் அளந்தாய்

அன்றிவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்!

திறல்போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி! கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி! குன்று குடையாய் எடுத்தாய்! குணம்போற்றி!

வென்று பகைகெடுக்கும் நின்கையில்

வேல்போற்றி! என்றென் றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்

வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ

ரெம்பாவாய்.

திருவாய்ப்பாடியில் வாழும் பெண்களின் விண்ணப் பத்தினை ஏற்றுக் கண்ணனும் படுக்கையை விட்டு எழுந்து அவர்களிருக்கும் இடம் நாடி வருகின்றான். அவன் வடிவழகும், நடையழகும் கொண்டு நடைபயின்று வரும்பொழுது இவர்கள் எந்தக் காரணத்திற்காகக் கண்ணனை நாடி வந்தார்களோ அந்தக் காரணத்தையே மறந்து போய்விடுகின்றார்கள். முதற்கண், அவன் வடிவழகிலே மெய்மறந்து தங்களை மறந்து விடுகின்றார்கள். இரண்டாவதாக, அவன் நடையழகிலே சொக்கிப் போய்விடுகின்றார்கள். ஆயர்குலப் பெண்கள் முதலில் கண்ணனுடைய கழலடிகளைப் போற்றுகின்றார்கள். இறைவனுடைய திருவோலக்கப் பொலிவினைக் கண்டாலும் ஒர் உண்மையான பக்தனின் நோக்கு அவனுடைய அடிகளிலேயே இருக்க வேண்டும். மாவலி ச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்கேட்டு இந்த உலகத்தையே அளந்த அந்தத் திருவடிகளைப் போற்றுகின்றார்கள்.