பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் Z

மாதத்துடன் தட்சிணாயனம் முடிந்து தைத் திங்களின் முதல் நாள் பொங்கல் நன்னாள் பிறப்புடன் உத்திராயனம் தொடங்குகிறது. எனவே பழமை கழிந்து, புதுமை பூத்துக் குலுங்குவதற்கு மார்கழி முடிவும் தைத்திங்களின் தொடக்கமும் அறிகுறிகளாய் அமைகின்றன எனலாம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கண்ணபிரான் பகவத்கீதையில் குறிப்பிட்டுள்ளார். எனவே மார்கழி மாதம் தனிச் சிறப்பு வாய்ந்த மாதம் என்பது புலப்படுகின்றது. உலகினர் மேற்கொள்ளும் பழைய நோன்பு ஒன்றினை ஆதாரமாக வைத்துக் கொண்டு வைணவ சமயப் பேருண்மையினை வெளிப்படுத்தும் பிரபந்தமாக ஆண்டாள் திருப்பாவையினை இயற்றியுள்ளார். கண்ணனுக்கு ஆட்பட்டு நெருங்கிய நேயம் கொண்டு ஒவ்வொருவரும் தமக்கு இயைந்த முறையில் தொண்டு செய்து திருமாலின் திருவடிப் பேற்றிற்கு ஆளாக வேண்டுமென்று அவனருளாளே அவன் தாளை வணங்கித் துதித்து நிற்பதே திருப்பாவையின் உட்பொருளாகும். “ஐயைந்தும் ஐந்தும் அறியா மானிடரை வையம் சுமப்பதும் வம்பு’ என்னும் மொழி திருப்பாவையின் ஏற்றத்தினை எடுத்துரைக்கும்.

இனி, திருப்பாவையின் முதற் பாடலைக் காண்போம்.

‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்று பாடல் தொடங்குகிறது. மார்கழி மாதம், முழு நிலா - பெளர்ணமி நாள். மாதங்களில் மார்கழியும், ஒரு மாதத்தில் பெளர்ணமியும் தனிச் சிறப்பு வாய்ந்தனவாகும். “இந்த நல்ல நாளில் நீராடப் போகலாம் வாருங்கள் - வைகறையில் பனி நீராடப் போகலாம் வாருங்கள்’ என்று பெண்கள் கூட்டமாகச் சென்று வீட்டிலுள்ள பிற பெண்களை அழைக்கிறார்கள். நேரிழையிர்’ என்று அவர்கள் பிற பெண்களை அழைப்பது அந்தப் பெண்களைப் புகழ்வதற்கும் முன்னிலைப்படுத்தித் தங்களோடு வாருங்கள் என்று அழைப்பதற்கும் அடித்தளமாய் அமைகின்றது எனலாம்.