பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருப்பாவை விளக்கம்

காலடிகளைப் போற்றியவர்கள் இப்பொழுது சீதாப் பிராட்டியின் பொருட்டுத் தென்னிலங்கை சென்று இராவணன் உள்ளிட்ட அரக்கர் குலத்தை அடியோடு வேரறுத்த வெற்றியைப் போற்றுகின்றார்கள். மூன்றாவதாக, கம்சனால் ஏவப்பட்டு, வண்டி வடிவில் வந்த சகடாசுரனைக் காலால் எட்டி உதைத்து மாயச் செய்த புகழினைப் பாடுகின்றார்கள். நான்காவதாக, தன்னைக் கொல்லக் கம்சனால் ஏவப்பட்ட, கன்று வடிவில் வந்த அசுரனை எறிதடியாகக் கொண்டு விளங்கனி வடிவாகத் தொங்கிக் கொண்டு, கண்ணனைக் கொல்லத் திட்டமிட்ட அசுரன்மேல் வீசியெறிந்து, இரண்டு அசுரர்களையும் ஒருங்கே ஒழித்தவனே! என்று அவனுடைய வெற்றியைப் போற்றுகின்றார்கள். ஐந்தாவதாக, எப்படிப்பட்ட பகையினையும் மாய்த்து வெற்றி பெறுகின்ற திறனுடைய அவனுடைய கை வேலினைப் போற்றுகின்றார்கள்.

அன்றில் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்!

திறல்போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி! கன்று குனிலா எறிந்தாய்! கழல்போற்றி! குன்று குடையாய் எடுத்தாய்! குணம்போற்றி!

வென்று பகைகெடுக்கும் நின்கையில்

வேல்போற்றி!

இவ்வாறு கண்ணனுடைய வீரப்பண்பினையும் வெற்றித் திறனையும் விளங்கப்பாடிய ஆயர்குடிப் பெண்கள் இப்பொழுது தாங்கள் வந்த காரியத்தினையும் நினைத்துக் கொள்கின்றார்கள். பாவை நோன்புக்கு வேண்டிய பறையைப் பெற்றுக் கொள்வதற்காக, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்வதையே உவப்பாக மேற்கொள்ளும்