பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருப்பாவை விளக்கம்

‘உன்னை யாசித்து வந்திருக்கின்றோம்; பாவை நோன்புக்குரிய பறையை நீ இப்பொழுது தருவாயேயானால் நாங்கள் பெற்றுக் கொள்வோம், உன்னுடைய பெருஞ் செல்வத்தினையும் வீர மேம்பாட்டினையும் புகழ்ந்து பாடி எங்கள் வருத்தத்தைத் தீர்த்துக் கொண்டு மகிழ்ச்சியடைவோம்” என்கின்றார்கள்.

உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

என்கிறார்கள்.

இந்தப் பாசுரத்தில் சொல்லப்பட்ட கருத்து,

பகவானைப் பிரிந்து வருத்தமுறும் உயிர்கள், அவனுடைய புகழைப்பாடி வருத்தம் தீர்ந்து, மகிழ்ச்சியிலே திளைக்க வேண்டும் என்பதாம். இதற்குக் கண்ணனுடைய பேரருள் துணைசெய்ய வேண்டும் என்று அவனருளாலே, அவன் தாள் வணங்குகின்றார்கள்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (25)