பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. மாலே மணிவண்ணா

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன

கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன் னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே

ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.

இந்தத் திருப்பாசுரத்தில் திருவாய்ப்பாடிப் பெண்கள் கண்ணனுடைய செளலப்பியம் என்றும் எளிமையிலும் அவனுக்கே உரிய காதற் சிறப்பிலும் ஈடுபட்டு அவனுடைய திருக்கல்யாண குணங்களைப் பலபடியாகப் புகழ்ந்து பேசுகின்றார்கள். அவ்வாறு புகழ்ந்து பேசும் போக்கில் தாங்கள் வேண்டுவனவற்றையும் விரும்பிக் கேட்கின்றார்கள்.

முதற்கண், மாலே என்று அழைக்கின்றார்கள். ‘மால்’ என்ற சொல்லுக்கு மயக்கத்தைத் தருபவன்’ என்பது பொருள். அதற்குமுன் நாரணனாக, பரமனாக, தேவனாக அவனுடைய பரத்துவ நிலையைக் கண்டவர்கள், இப்பொழுது அவன் தங்களை அவனுடைய வடிவழகாலும், நடையழகாலும் கவர்ந்து, மாயங்கள் பலவற்றை எழுப்பும் திறம்வாய்ந்தவன் என்று குறிப்பிடுகிறார்கள். மாலே என்று சொன்னவர்கள், அடுத்து ‘மணிவண்ணா என்கின்றார்கள். பிறிதோர் ஆழ்வாரும் கொண்டல் வண்ணனை கோவலனை வெண்ணெய் உண்ட வாயனை’ என்றது உன்னி மகிழத்தக்கது “மாலே மணிவண்ணா! நீ மார்கழி நீராட வேண்டும்’ என்கின்றார்கள். பாவைநோன்பு நோற்பதற்கு முன்னோர்கள் என்னென்ன மேற்கொண்டார்கள், அவர்கள்