பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O)4 திருப்பாவை விளக்கம்

பின்பற்றிய சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு என்னென்ன பொருள்கள் வேண்டுமென்பதையும் நீ கேட்டுக் கொள்ள வேண்டும் என்கின்றார்கள்.

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன

கேட்டியேல்.

உலகத்தையெல்லாம் தன் ஒலியால் கிடுகிடுக்கச் செய்யும் பால்போன்ற நிறமுடைய பாஞ்ச சன்னியம் என்ற கண்ணனுடைய கைச்சங்கினை ஒத்த சங்குகள் வேண்டும் என்கின்றார்கள். அடுத்து, பறைவேண்டுமென்கின்றார்கள். மூன்றாவதாக, பல்லாண்டு பாடும் பரமபாகவதர்கள் வேண்டும் என்கின்றார்கள். வைகறை இருட்டை விலக்கும் திறம்வாய்ந்த மங்கல விளக்கு வேண்டும் என்கின்றார்கள். கொடி வேண்டும் என்கின்றார்கள். வைகறையில் புறப்பட்டுப் போகும்போது தலைமேல் பணிவிழாமல் தடுக்கும் விதானம் என்ற மேற்கட்டி வேண்டும் என்கின்றார்கள். இவற்றையெல்லாம் ஆலின் இலைமேல் பள்ளி கொண்ட பரந்தாமன் கொடுத்து அருள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார்கள்.

ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன் னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.

இந்தத் திருப்பாசுரத்தின் வழி, பண்டைநாளில் மேற்கொள்ளப்பட்ட பாவை நோன்பு நோற்பதற்கு வேண்டிய பொருள்களைப் பாங்குறக் காணலாம்.