பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

குடகமே தோள்வளையே தோடே

செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

இந்தத் திருப்பாசுரம் இன்றைக்கும் தமிழ்ச் சமுதாயத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த பாசுரமாகக் கொண்டாடப் பெறுகின்றது.

விரதத்திற்கு வேண்டிய சங்கு, பறை, பல்லாண்டு பாடுவோர், மங்கல விளக்கு, கொடி, மேல் விதானம் முதலியனவற்றைக் கண்ணனிடம் இரந்து பெற்ற பெண்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர்கள் ஆடுகின்றார்கள்; பாடுகின்றார்கள்; பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடியினைப் பரவிப் போற்றுகின்றார்கள். மகிழ்ச்சியில் திக்கு முக்காடுகின்ற அவர்கள் “கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா’ என்கின்றார்கள். பகைவர்களை வென்று அன்பர்களிடம் தோற்பவன் என்ற குறிப்புப் பொருள் இதில் தொனிக்கக் காணலாம். ஏனெனில் தன் வில்லம்பினால் எவரையும் வெல்லும் திறன் வாய்ந்த கோவிந்தன், தன்னை வணங்கும் அடியவர்களின் அன்புக்கு ஆற்றாது அவர்களின் அன்புக்குக் கட்டுப்படுகின்றான் என்பது இத்தொடரால் பெறப்படும் கருத்தாகும்.