பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் QZ

உன்னைப் புகழ்ந்து பாடி நாங்கள் பெறுகின்ற சன்மானம் இவை இவையென்று பட்டியலிட்டுக் காட்டுகின்றார்கள். சூடகம் கையில் அணியும் ஒருவகை ஆபரணமாகும். தோளில் அணியும் அணிகலன் தோள்வளை என்றும், காதில் அணியும் தோடு அணி அல்லது கரணப்பூ என்றும், காலில் அணிவது பாடலம் என்றும் கூறப்படும். இவ்வாறான பல்வேறு அணிகலன்களையும் நாங்கள் உவகையுடன் பேணி அணிந்து கொள்வோம் என்று குறிப்பிடுகின்றார்கள்.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

என்கிறார்கள்.

திருவாய்ப்பாடிப் பெண்கள் முதலில் தங்களுக்கு வேண்டிய தங்க நகைகளைக் கேட்கின்றார்கள். அதற்குப் பின்னால் நல்லாடைகளை நயந்து கேட்கின்றார்கள். ஆடை உடுத்தி, அணிகலன்கள் அழகுபெற அணிந்துகொண்ட பின்னர், பாற்சோறு முழுவதுமாக மறையும்படி நெய்யூற்றி அந்த அக்கார அடிசிலை ஆக்கி எல்லோரும் கூடியிருந்து உண்ண வேண்டும் என்கின்றார்கள். அந்த அக்கார அடிசிலில் ஊற்றப்பட்ட நெய், உண்ணும்பொழுது, முழங்கை வழியாக வழிய வேண்டும் என்கின்றார்கள். இவ்வாறு இந்தத் திருப்பாடல் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதில் முடிகின்றது.

ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.