பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 yw&P

5. என்றென்றும் உன் சேவகமே ஏத்திப்பறை

கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்

பாவாய் -4

6. நெருப்பு என்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறை தருதி' ' —25

7. மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன

கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே'

—26

8. இறைவா நீ தாராய் பறை; ஏலோர் எம்

பாவாய் . -28

7. திருப்பள்ளி எழுச்சி

இவை கண்ணனின் திருப்பள்ளி எழுச்சியாகவும், அவன் புகழ்ச்சியாகவும், ஆயமகளிரின் முறையீடாகவும் உள்ளன என்பதை அறிக.

கண்ணனை எழுப்புவதற்கு முன் நப்பின்னையை விளித்து அவனை எழுப்பித்தருமாறு வேண்டுகின்றனர். அவன் அரண்மனைக்குச் சென்று வாயில் காப்போனை விளித்துக் கதவு திறக்குமாறு கூறுகின்றனர், நந்தகோபன், யசோதை, பலராமன் இவர்களையும் எழுப்புகின்றனர்.