பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை

நூல் அறிமுகம்

பாவை வழிபாட்டைக் கூறுவதால் இது திருப்பாவை எனப்பட்டது. பாவை என்பது அவர்கள் வழிபட்ட பெண்

தெய்வம்; அதைக் கார்த்தியாயினி என்று கூறுகின்றனர்.

பாவை வழிபாடு என்பது தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் இருந்து வருகிறது. கொல்லிப் பாவை என்ற பெண் தெய்வத்தை வழிபட்டமை சங்க இலக்கிய வாயிலாகத் தெரிகிறது.

மார்கழி மாதம் நீராடுதல் ஒரு பெரு விழாவாகக் கொண் டாடப்பட்டது என்று தெரிகிறது. பாவையை வழிபட்டு ஆற்று நீரில் குடைந்து நீராடினர். இதுவே பாவை நோன் பின் அடிப்படையாகும்.

பாவை நோன்பு மேற்கொள்வார் சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர் என்பது தெரிகிறது. நோன்புகள் நோற்பார் உணவு குறைத்தும், ஒப்பனை தள்ளியும் நியமத் தோடு ஒழுகுவர். அதனையே இப் பெண்களும் செய்தனர் என்பது தெரிகிறது.

தி-2