பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 11

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

பன்னுதிருப்பாவைப் பல்பதியம்-இன்னிசையால்

பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு என்பது முதற்பாட்டு. இது திருப்பாவையைப் பற்றிய அறிமுகம்.

அன்னவயல் புதுவை-அன்னப் பறவைகள் சூழ்ந்த வளமான வயல்களை உடைய புதுவை என்னும் பூரீவில்லிபுத்துரில்

ஆண்டாள்-(இயற்பெயர்) அரங்கற்கு-திருமாலுக்கு பன்னு திருப்பாவை-சொல்லிய பாவைப் பாட்டு பல் பதியம்-பல செய்யுள்கள் இன்னிசையால்-இனிய இசையோடு பாடிக் கொடுத்தாள்-பாடியருளினாள்; நற்பாமாலை-அவை நற்பாமாலை ஆகும்:

பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு-இறைவனுக்குத் தான் முதற்கண் சூட்டி அழகு பார்த்துப் பின் கொடுத்த வளைப் பேசு (அவள் பெருமையைக் கூறுக).

தொகுப்புரை

அன்னம் சூழும் வயல்களை உடைய புதுவை என்து வழங்கும் பூரீவில்லிபுத்துரில் வாழும் ஆண்டாள் அரங்க நாதனுக்குப் பாட்டாக எழுதித் திருப்பாவைப் பதிகங்களை இனிய பண் வரையறையோடு பாடிக் கொடுத்தாள்; அவை