பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 17.

15.

16.

17.

ஏடி இளங்கிளியே! இன்னமுமா தூக்கம்?

எழுந்திரு' ஏன் இப்படிக் கத்துகிறீர்கள் இதோ

வந்துவிடுகிறேன்' "ஆமாம் வெறும் பேச்சுதான்; உன்னைப்

பற்றி எங்களுக்கு முன்னமே தெரியும்’ ’ நீங்கள்தான் கெட்டிக்காரர்களாக இருங்கள்;

அது நீங்களோ நானோ யாராவது இருந்து போகட்டும்! "

அதுசரி! விரைவில் புறப்பட்டு வருக! நீ மட்டும் ஏன் தனிமைப் படுகிறாய்?'

எல்லாரும் புறப்பட்டு வந்து விட்டார்களா?' வந்து விட்டதாகக் கருதிக் கொள்;

மாயவனைப் பாடுவோம் வா!

நந்த கோபனின் அரண்மனைக் காவலனே! மணிக்கதவம் தாள்திறப்பாய் ; ஆயர் சிறுமியர் எமக்குப் பறை தருவதாக நேற்றுக் கண்ணன் வாக்குத் தந்துவிட்டான்; நீராடி விட்டுத் துய்மையாக வந்து இருக்கிறோம் துயில்எழுப்பப் பாடுவதற்கு; ஐயா! மறுப்புச் சொல்லாமல் உன்

கைகளால் கதவுகளைத் திறந்துவிடுக.

அறம் செய்யும் நந்த கோபாலா! எழுக! யசோதாய் விழித்து எழுக!