பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 亦r宇

芷8。

19.

30.

உம்பர் கோமானே உறங்காது எழுக! பலதேவா! நீயும் உன் தம்பியும் உறங்காமல் துயில் எழுக.

நந்த கோபாலன் மருமகளே!

நப்பின்னாய்! கடை பிறப்பாய்; பொழுது விடிந்துவிட்டது;

கோழியும் கூவுகிறது; மாதவிப்பந்தல் மேல் குயிலினங்களும் கூவுகின்றன;

உன் கணவனின் புகழை யாம் பாட நீ வந்து கதவைத் திறப்பாய்;

யாம் மகிழ்வு அடைவோம்.

நப்பின்னையை அனைத்துக் கொண்டு

அவளைப் பிரிய மனமில்லாமல் கண்ணா நீ உறங்குகிறாய்!

மைவிழியாளே! நீயும் அவனை எழவிடமாட்டாய் ! உன்னால்

பிரிந்து இகுக்க இயலவில்லை. இது நல்லது அல்ல; நியாயமாகப்

படவில்லை; அவனைத் துயில் எழுப்புக.

விமலா! நீ துயில் எழுக;

நப்பின்னை நங்காய்! நீயும் துயில் எழு; உக்கமும் ஒளித்தட்டும் தந்து உன்

மணாளனை எழுப்பி எங்களிடம் அனுப்புக;

எங்களை நீராடச் செய்து மகிழவை;