பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ராசி

25.

26.

27.

28.

உன் கைவேல் பகைகெடுக்கும்; அதன் வீரத்தைப் போற்றுகிறோம்; இன்று பறை கொள்ள வந்திருக்கிறோம்; எமக்கு அருள் செய்க!

நெடுமாலே! உன்னை வழிபட்டு நிற்கிறோம்;

பறை தருக, பறை தந்தால் உன் செல்வத்தையும்

ஆட்சியையும் யாம் பாடி வருத்தம் தீர்வோம்;

மகிழ்வோம்.

மார்கழி நோன்பு இதற்கு நீராடுவதற்கு வேண்டுவன இவை; எங்கும் ஒலிக்கும் பாஞ்சசன்னியம் போன்ற வெண்சங்கு; பெரும்பறை, பல்லாண்டு இசைப்பவர்கள்; கோல விளக்கு; கொடி; விதானம்; இவற்றை மணிவண்ணா! நீ தந்தருள்க.

பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தா! உன்னைப் பாடிப்பெறும் சன்மானங்கள்: சூடகம்; தோள்வளை, செவிப்பூ, பாடகம் என்று

இத்தகைய, அணிகலன்கள் அணிவோம்; புதிய ஆடை உடுப்போம்; பாற்சோறு நெய் முழங்கை வழியக்கூடியிருந்து உண்போம்:

மனம் குளிர்வோம்.

அறிவு குறைந்த ஆயர் யாம்; எம் குலத்தில் நீ பிறந்து எங்களுக்கு உயர்வு தந்தாய்