பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 21

29.

30.

இந்த உறவு நீடித்து நிற்கும்; அறிவில் குறைந்தவர்கள் யாம்; அன்பினால் உன்னைச் சிறுபேர் இட்டு அழைத்திருப்போம்; அதைப் பொருட்படுத்தாதே! இறைவா! நீ

பறை தருக.

இந்தச் சிறுகாலைப் பொழுதில் வந்து உன்னைச் சேவித்துப் பொற்றாமரை அடி போற்றுகின்றோம்; மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்த உனக்கு ஏவல் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்; இன்று இந்த உறவு பறை கொள்வதற்கு மட்டும் அன்று; இன்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன்னை விட்டுப் பிரியமாட்டோம்; உனக்கே யாம் ஆட் செய்வோம்;

எம் ஏனைய ஆசைகளை அகற்றி விடுக!

கடல் கடைந்த மாதவன்; அவனைச்

சேயிழையார் சென்று வணங்கி அங்குப் பறை கொண்டனர்; இச் செய்தியைப்

பட்டர்பிரான் கோதை சங்கத் தமிழில் பாடி இருக்கிறாள்; இம் முப்பது பாடல்களையும்

பிழையின்றிப் பாடுபவர் இறைவன் திருவருள் பெறுவர்; இன்புற்று வாழ்வர்.