பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்

1. மார்கழித்திங்கள்

(நீராடுவோம்)

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் ரோடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

பதவுரை

மார்கழித் திங்கள்-மார்கழி மாதம் மதிகிறைந்த நன்னாளால்-நிலாவிசும் விடியற் பொழுதில்

ரோடப்போதுவீர்-நீராட வருபவர்

போதுமினோ-புறப்பட்டு வருவீராக

நேர் இழையிர்-அழகிய ஆபரணங்களை உடைய

செல்வ மகளிரே

சீர் மல்கும்-வளம் மிக்குள்ள ஆய்பாடி-ஆயர் பாடியில் வாழும் செல்வச் சிறுமீர்கள்-செல்வக்குடியில் பிறந்த சிறுமியர்களே

கூர்வேல்-கூரிய வேலினையும்

கொடுந்தொழிலன்-பகைவரைத் தாக்கும் வீரச்

செயலையும் உடைய

நந்தகோபன் குமரன்-நந்த கோபன் மகனும்