பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ராதி:

செய்துகொள்ள மாட்டோம்; கூந்தலுக்கு மலர் சூடி அழகு சேர்க்க மாட்டோம்; தீய செயல்களைச் செய்யமாட்டோம்; தீய கோள்சொற்களைப் பேச மாட்டோம்.

தானமும், தருமமும் இயன்றவரை செய்து பிறவித் துயரில் இருந்து உய்யும் வழி அறிந்து செயல்பட்டு

உயர்வோம்.

விளக்கவுரை

கிரிசைகள்-கிரியை என்றால் சடங்கு என்பது பொரு ளாகும். சடங்குகள் என்பவை விரதங்கள்; கிரிசைகள் கிரியைகள் என்பதன் இலக்கணப்போலி; யகரம் சகரமாகத்

திரிந்தது.

பையத் துயின்ற-யோக நித்திரை; விழிப்போடு கூடிய

உறக்கம்; அதனால் மென்மையாகத் துயின்று எனக் கூறப் பட்டது:

பைய-மெல்ல.

பரமன்-மேலானவன்.

அடி பாடி-வணங்கிப் போற்றி-திருவடி வணங்குதற்கு உரியது; எனவே வணங்கிப் போற்றி என்று கொள்க.

நெய் உண்ணோம்; பால் உண்ணோம்-விரத நாட்களில் சுவை மிக்க உணவைத் தவிர்ப்பது வழக்கம்; நெய் பால் இவை சுவையும் சத்தும் உள்ள உணவுகள். ெதய், பால் என்று கூறியதனால் தயிரும் அடங்கும் என்க.

நாட் காலை-நாளின் பகுதி காலை; விடியல் என்க.

மை திட்டுதல், மலர் சூடுதல்-ஒப்பனை செய்தலாம்; அவற்றைத் தவிர்ப்பது மனத்தைக் கட்டுப்படுத்தவும், கவர்ச்சி தரும் தோற்றம் தவிர்க்கவும், ஆடவர் மனம் இழுப்பதைத் தவிர்க்கவும் ஆகும்.