பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 31

தொகுப்புரை

உலகு அளந்த பெருமான் புகழைப்பாடி நாம் நம் பாவைத் தெய்வத்துக்கு நம் வழிபாட்டைக் கூறி நீராடுவ தால் விளையும் நன்மைகள் இவை; நாடு முழுவதும், மாதந்தோறும் மூன்று முறை மழை பெய்யும்; அதனால் செந்நெல் மிக்கு விளையும்; அவற்றின் இடையே கயல் மீன்கள் பிறழும்; குவளை மலரில் வண்டுகள் கண் துயிலும்; பசுக்கள் பாற் குடங்களை நிரப்பும், வளம்மிக்க பெரிய பசுக்களும் நீங்காத பெருஞ் செல்வமும் நிறைந்து நன்மை பெருகும்.

விளக்கவுரை

ஓங்கி உலகளந்த உத்தமன்-உலகளந்த பெருமான், மாவலியிடம் மண்கேட்டு வந்த பெருமான் ஓங்கிப் பேருருவம் எடுத்தார். வாமன அவதாரத்தில் நடந்த நிகழ்ச்சி இது. அது நன்மைக்காகச் செய்த செயல் என்பதால் உத்தமன்.' என்றார்; இறைவன் எங்கும் நிறைந்தவர் என்பது உட் கருத்தாகும்.

பாவைக்குச் சாற்றி-பாவையை வழிபட்டு; பாவைத் தெய்வத்தை மனத்தில் நிறுத்திக்கொண்டு. கருத்துரை: மழை பெய்வதால் செந்நெல் விளையும்; நீர் மிக்கு இருப்பதால் கயல் பிறழுகின்றது; குவளை மலர்களில் வண்டு தேன் உண்டு அங்கேயே படுத்து உறங்கிவிடு கின்றது; பசுக்கள் மேய்ச்சல் நன்கு பெறுகிறது; அதனால் இடையர்கள் கறக்கும்தோறும் குடம் குடமாகப் பாலைத் தருகின்றன. அத்தகைய பெரும் பசுக்களும், நிலைத்த செல் வமும் பெருகும்.

இவை அனைத்தும் மழையின் விளைவு ஆகும்; எனவே பாவையை வழிபட்டுப் பின் நீராடுக. அதற்குமுன் உத்த

மனைப் பாடுக என்பதாம்.