பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 rsré!

பேரரவம் கேட்டிலையோ-பேரொலி கேட்கவில்லையோ பிள்ளாய் எழுந்திராய்-பெண் பிள்ளையே எழுந்து வருக பேய்முலை நஞ்சுண்டு-பூதகியின் பாலை உண்டு கள்ளச் சகடம்-சூழ்ச்சி மிக்க சகடாசுரன்

கலக்கு அழிய-கலங்கி அழிய கால் ஒச்சி-காலால் உதைத்து

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்தவித்தினை-பாற்கடலில் ஆதிடேசன் மீது துயில் கொள்ளும் மூலப் பொருளை முனிவர்களும் யோகிகளும்-முனிவர்களும் யோகியர்களும் உள்ளத்துக் கொண்டு- மனத்தில் தியானித்துக் கொண்டு மெள்ள எழுந்து-மெல்லத் துயில் எழுந்து அரி என்ற பேரரவம்-அரி அரி என்று அழைக்கும் பேரொலி உள்ளம் புகுந்து-நம் உள்ளத்துாடு புகுந்து குளிர்ந்து-அதனால் மனம் குளிர்வோம்.

தொகுப்புரை

பறவைகளும் விழித்து எழுந்து மாறி மாறி ஒலிக்கின்றன; கருடனுக்கு அரசனான பெருமானின் திருக் கோயிலில் வெண் சங்கு விளித்து அழைக்கிறது. அதனைப் பெண் பிள்ளையே கேட்டிலையோ! பூதகியின் முலைப்பால் உண்டு அவளைச் சாய்த்தவனும், வஞ்சனைமிக்க சகடாசுரனை உதைத்துச் சாய்த்தவனும்ஆகிய பரந்தாமன் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளான். அம் மூலப் பொருளை உள்ளத்தில் கொண்டு முனிவர்களும் யோகிகளும் அவன் நாமம் சொல்லி அழைக்க அது நம் உள்ளத்தைக் குளிர்வித்து மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்; நீ துயில் எழுக.

விளக்கவுரை

புள்ளும் என்பது, வானம் வெளுத்துவிட்டது; அதோடு பறவைகளும் என்று கூறியது. இறந்தது தழுவிய எச்ச