பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 39

உம்மை; உயிர்களும் மற்றவர்களும் எழுந்து தத்தம் தொழி லில் ஈடுபடுகின்றனர் என்பதாம்.

சிலம்புதல்-இரட்டிப்பொலி எழுப்புதல்; மாறி மாறி ஒலித்தல்.

புள்-பறவை; இங்குக் கருடனைக் குறித்தது.

அரையன்-அரசன் என்பது திரிந்து அரையன் என ஆயிற்று, சகரத்துக்கு யகரம் போலி.

சங்கு முழங்குவது-மற்றவர்களை விளிக்க; அதனால் விளிசங்கு எனப்பட்டது.

பிள்ளாய்- பிள்ளை-ஐ ஆய் எனத் திரிந்தது, பெண் மகளைக் குறித்தது, விளித்தொடர்.

பேய்முலை நஞ்சு உண்டு-முலை தர வந்தவள் நஞ்சு தாங்கி இருந்தாள் என்பதாம். தாயுருவில் வந்தாலும் அவள் பேய் என்பதனைச் சுட்டிக் காட்டுகிறார்.

சகடம்-வண்டி, சகடாசுரன்;

கலக்கு அழிய-கலக்கத்தினை உண்டு பண்ணி.

வித்து- விதை போன்றவன், மூலப்பொருளை உணர்த் தியது.

மெள்ள- மெல்ல என்பது எதுகை நோக்கித் திரிந்தது.

குளிர்ந்து- மனம், மகிழ்வோம், காலவழுவமைதி.

புள்- இருமுறை வந்தது; சொற்பொருள் பின்வரு

நிலையணி என்க. இருமுறையும் பறவை என்ற பொருளி லேயே வந்துள்ளது.