பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ராசி

7. கீசுகி சென்றெங்கும்

(கதவைத் திறக்க எனல்)

கீககீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்

பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஒசை படுத்தத்தயிராவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்.

பதவுரை

கீசு கீசு என்று-கீச்கீச் என்று ஆனைச்சாத்தன்- வலியான் என்னும் கரிக்குருவி

கலந்து பேசின பேச்சரவும்- தம்முள் மகிழ்ந்து உரை யாடும் பேச்சொலி

கேட்டிலையோ- காதில் விழவில்லையா பேய்ப் பெண்ணே-- மந்தமானவளே

காசும் பிறப்பும் கலகலப்ப- காசு பிறப்பு என்ற தாலி வகைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு கலகலப்பு ஒலி செய்ய கைபேர்த்து-கைபெயர்த்து (முன்னுக்குப்பின் மத்தினை இழுத்து) வாச நறுங்குழல் ஆய்ச்சியர்- இடைப் பெண்கள் மத்தினால் ஒசைப்படுத்த-மத்துக்கொண்டு ஓசை

உண்டாக்க