பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 prirá?

உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்-உன்னை அழைக்க

வந்துநின்றோம். கோதுகலமுடைய பாவாய்- குதுகலம் மிக்க பெண்ணே! எழுந்திராய்-துயில் எழுக பாடிப்பறை கொண்டு-கண்ணனைப் பாடிப் பரிசில் பெற்று மாவாய் பிளந்தானை-மாவினது (குதிரையினது) வாயைப்

பிளந்தவனை. மல்லரை மாட்டிய-மற்போர் செய்யும் வீரர்களை மாளச்

செய்த தேவ ஆதிதேவனை-தேவர்களுக்கு முதற்கடவுளாக

விளங்கும் நாரணனை: சென்று நாம் சேவித்தால்-சென்று நாம் வணங்கினால் ஆவா என்று ஆராய்ந்து-உண்டாகும் நன்மைகளை ஆகா என்று ஆராய்ந்து அருள்-யாம் சொல்வதைக் கேட்டு அருள்க.

தொகுப்புரை

கிழக்கு வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் சிறிது நேரம் விடுதலை பெற்று மேய்வதற்குப் பரவிச் செல்கின்றன. போகாமல் எஞ்சி உள்ள சிறுமியர்களும் போவதற்காகப் புறப்படுகின்றனர்; அவர்களைப் போகாமல் தடுத்து நிறுத்தி யுள்ளோம்; கேசிகன் என்னும் குதிரை வடிவில் வந்த அரக்கனை வாய்பிளந்து வென்றவனை, மல்லர்களை மாளச்செய்த மாவீரனை, தேவர்களுக்கு எல்லாம் ஆதி நாயகனைச் சென்று நாம் வணங்கினால், நன்மைகள் உண் டாகும்; ஆகா இது ஏற்கத்தகும்' என்று நீ முடிவு செய்து அருள்க.

விளக்கவுரை

கீழ்வானம்-கிழக்கே சூரியன் உதிப்பதால் வெளுத்தது என்க. சிறுவீடு-சிறிதுவிடுதலை பெற்று.