பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 47

தொகுப்புரை

தூயமணி மாடத்தில் ஏற்றிய தூப விளக்கு ஒளியிட மனம்கமழும் துயில் அணைமேல் துயில்கொள்ளும் மா' மகளே! அழகிய கதவின் தாளைத் திறப்பாய். மாமி! அவளை எழுப்ப மாட்டிரோ! உன் மகள் என்ன ஊமையோ செவிடோ, சோம்பல் உடையவளோ, நிம்மதியான துளக்* மயக்கத்தில் கிடக்கிறாளே. அவளை எழுப்புங்கள். மாயன் மாதவன் வைகுந்தன் என்று அவன் பல பெயர்களைப் பலகாலும் சொல்லிப் பயன்பெறுவோமாக.

விளக்கவுரை

தூமணி-தூயமணி என்பதன் மரூஉ முடிவு: மாமான் மகளே-மாமன் மகளே, உறவு பற்றிஅழைத்தது;

மாமி அவளை எழுப்பீரோ-முதற்கள் மகளை நேரிடை யாக எழுப்பிப் பார்க்கிறாள். அவள் எழுவதாக இல்லை. அதனால் அவள் தாயை விளித்து மகளை எழுப்பீரோ என்று கூறுகிறாள்,

வாய் திறந்து பதில் பேசாததால் ஊமை என்றும், என்ன ஏது என்று கேட்டு எழாததால் செவிடு என்றும், அவள் திச்சயமாகச் செவிடுமல்லள் ஊமையுமல்லள் எழுவதற்குச் சோம்பல்தான் காரணம் என்ற முடிவுக்கு வருகிறாள். அதனால் அனந்தலோ என்றும் கேட்கிறாள்.

துயிலை மந்திரம் என்று கூறியது அந்த மயக்கத்தில் இருந்து விடுபடாததால். நாமம்-பெயர்; ஆயிரம் பெயர்கள் உடையவன் திருமால். நவின்று-கூறிப் பயன் அடைவோம் என்று முடிக்க.

தூமணி மாடம், சுற்றும் விளக்கு, மணம் கமழும் பஞ்சணை-இவை செல்வ வாழ்க்கையை விவரிக்க வந்தன.