பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 prm-á*

தோற்றும் தந்தான்

தோற்றும் அவன் கொடை வள்ளலாக இருக்கிறான் என்ற பொருள் நயம் காண்க. அனைத்தையும் அவன் தோற்ற போதும் தூக்கத்தை மட்டும் அவன் இழக்கவில்லை. அதை உன்னிடம் தந்துவிட்டுச் சென்று இருக்கிறான் என்ற நயம் காண்க.

உனக்கே-என்பதால் முழுத்துக்கமும் உன்னிடம் தந்து விட்டான்; வேறு யாருக்கும் தரவில்லை; ஏகாரம் பிரிநிலை,

தந்தானோ-ஓகாரம் வியப்பிடைச் சொல்.

கும்பகருணன் சாகவில்லை; அவன் உன்வடிவில் வாழ் கிறான் என்ற கருத்து அமைந்திருத்தல் காண்க. செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்பர், அதுபோல அவன் தந்தான் என்ற நயமும் காண்க.

11. கற்றுக் கறவை

(விழித்து எழுக)

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்

கொடியே! புற்றரவல்குல் புனமயிலே! போதராய்! சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து நின் முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! நீ எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.