பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 51.

பதவுரை

கற்றுக் கறவை-கன்றை உடைய கறவைப் பசு கணங்கள்-கூட்டங்கள்

பல கறந்து-பலவற்றைக் கறந்து செற்றார் திறல் அழிய-பகைவர் வலிமை கெடும்படி செருச் செய்யும் கோவலர் தம் பொற்கொடியே-போர் செய்யும் இடையர் மகனே! புற்று அரவு அங்குல் புனமயிலே - பாம்பின் படம் போன்ற வடிவு உடைய அல்குலை உடைய காட்டு மயில் போன்றவளே. போதராய்-எழுந்து வருக; (போதல் தருக என்பதன் சிதைந்த வடிவு.) சுற்றத்துத் தோழிமார் எல்லாரும்-சுற்றமாகப் பழகும் தோழியர் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து-வந்து உன் வீட்டு முன் பகுதியில் வந்து கூடி, முகில் வண்ணன் பேர் பாட-கண்ணனைப் போற்றிப் LITT 1–

சிற்றாதே-அசையாமல் பேசாதே-பேசாமல் செல்வப் பெண்டாட்டி-செல்வ மகளே!

நீ சற்றுக்கு உறங்கும் பொருள்-c எதற்காக உறங்கு கிறாய்; அதன் பொருள் யாது?

தொகுப்புரை

கன்றுகளுடன் கூடிய பசுக்களைப் பால் கறந்து வாழும் வாழ்க்கையும், பகைவர்களை அழித்துப் போர் செய்யும் வீரச் செயலும், மற்றும் குற்றம் ஏதும் இல்லாத வாழ்வும்