பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 矿厅孕

உடைய இடையர்தம் மகளே! மயில் போன்ற சாயல் உடையவளே! புறப்பட்டு வருக.

'உன் சுற்றமாக இருந்து வரும் தோழியர் எல்லாரும் வந்து நின் முற்றம் வந்து கூடி நின்று மேக நிற வண்ணன் ஆகிய கண்ணனைப் பாடவும் செல்வமகளே! நீ அசையா மலும், பேசாமலும் நீ எதற்காக உறங்குகிறாய். அது தக்கது அன்று’ என்பதாம்.

விளக்கவுரை

- கற்றுக் கறவை-கன்று என்பது வேற்றுமைத் தொடரில் கற்று என வல்லெழுத்துப் பெற்றது. கன்றை உடைய கறவை என விரிக்க.

பசுமிகுதி-செல்வ வாழ்க்கையர் என்பதை உணர்த் திற்று. செருச்செய்யும்-வீர வாழ்க்கையர் என்பதாம்; பொற்கொடி-பொன்னால் ஆகிய கொடி போன்றவளே! அன்மொழித்தொகை. புற்று அரவு-புற்றிலிருந்து வெளிப்படும் பாம்பு. அரவு போன்றது அல்குல் எனக் கூறப்பட்டுள்ளது. அல்குதல்-தங்குதல் என்பது இதன் பொருள்.

பெண்ணின் இடைக்குக் கீழ் எடுப்பாக உள்ள இடத்தை அல்குல் என்ற சொல் குறிக்கிறது.

சிற்றாதே-சிறு அசைவும் செய்யாமல் என்பது பொருள்.

சிறு என்ற பண்புச்சொல்லை வினைச் சொல்லாக ஆக்கியது; இது புதுச் சொல் அமைப்பு ஆகும்.

பண்புப் பகுதியினின்று வினைச் சொல் அமைப்பது பொதுவாக வழக்கில் இல்லை.