பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ராசி

13. புள்ளின்வாய் கிண்டானை (தோழி! எழுக)

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய் பிள்ளைகளெல்லாரும் பாவைக களம புக்கார் வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்நது கலந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை

புள்ளின்வாய் கிண்டானை- கொக்கு வடிவத்தில் வந்த பகாசுரனைப் பிளந்தவனை,

பொல்லா அரக்களைக் கிள்ளிக் களைந்தானை-கொடிய அரக்கனான இராவணனின் சிரங்களைக் களைந்தவனை, கீர்த்திமை பாடிப் போய்- அவன் புகழைப் பாடிச் சென்று, பிள்ளைகள் எல்லாரும்- இளம் பெண்கள் அனைவரும்

பாவைக் களம் புக்கார்- பாவையை வழிபடும் களத்தை

அடைந்துவிட்டனர்.

வெள்ளி எழுத்து- சுக்கிரன் எழ வியாழன் உறங்கிற்று-குரு மறைந்து விட்டது.

புள்ளும் சிலம்பினகாண்- பறவைகளும் கூட்டு ஒலி எழுப்பின.

போது அரிக்கண்ணினாய்- மலர்களைப் போலச் சிவந்த அரிகள் (கோடுகள்) பரந்த கண்களை உடைய அழகியே!