பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 矿T孕

பிள்ளைகள்- பெண் பிள்ளைகளை உணர்த்தியது. பாவைக்களம்-பாவை வழிபாட்டுக் களம். போது-மலர்; அரி-கோடு சிவந்த கோடுகளை உடையது என்ப தாம், செவ்வரி பரந்த கண் என்பர்.

குள்ளக்குளிர-இரட்டைக்கிளவி. மிகக் குளிர்ச்சி உண் டாக என்பதாம்.

கள்ளம் தவிர்த்து-மனத்தில் ஒன்று வைத்து ஒழுகுதல்; ஒதுங்குதல் அதன் விளைவு.

கலந்து-கலந்து நீராடுக எனக் கூட்டுக.

14. உங்கள் புழைக்கடை (பரமனைப் பாடுவோம் எனல்)

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல் வாய்

கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய், நாணா தாய்! நாவுடையாய' சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ மிரம்பாவாய்,

பதவுரை

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-உங்கள்

வீட்டுப் புழைக்கடையில் உள்ள தோட்டத்து நீர் நிலையில்.

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்தன-செங்கழுநீர்ப்பூ மலர்ந்

தன; இதழ்கள் விரிந்தன.

ஆம்பல் வாய் கூம்பினகாண்-ஆம்பல் குவிந்துவிட்டன.