பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 61

"வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன்

வாயறிதும்' 'வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக' 'ஒல்லை நீ போதாய்; உனக்கென்ன வேறுடைமை' 'எல்லாரும் போந்தாரோ?' 'போந்தார்;

போந்தெண்ணிக் கொள்; வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.”

பதவுரை

எல்லே இளங்கிளியே-ஏடி இளங்கிளி போன்றவளே! இன்னம் உறங்குதியோ-பொழுது விடிந்தும் இன்னுமா உறங்குகிறாய்!

சில்லென்று அழையேன்மின்-தூக்கத்தைக் கெடுக் காதீர்,

நங்கைமீர் போதருகிறேன்-தோழியர்களே! இதோ விரைவில் வந்து விடுகிறேன்.

வல்லை-பேச்சில் வல்லவள் நீ

உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்-முன்பே உன் பேச்சு பற்றி எங்களுக்குத் தெரியும்.

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக-கெட்டிக் காரர்கள் நீங்களே, நானேதான் யாராவது இருக்கட்டும்.

ஒல்லை நீ போதாய்-விரைவில் நீ புறப்படுக

உனக்கு என்ன வேறு உடைமை?-நீ மட்டும் எம்மோடு கலக்காமல் என்ன தனியாக நடந்து கொள்கிறாய்?

எல்லாரும் போந்தாரோ-எல்லாரும் புறப்பட்டு விட் டன ரா?