பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 IrРтё?

போந்தார், போந்து எண்ணிக்கொள்-போய் விட்டனர், போய் விட்டதாகக் கருதிக்கொள்.

வல்ஆனை கொன்றானை - வலிய யானையைக் கொன்றவனை

மாற்றாரை மாற்று அழிக்கவல்லானை-பகைவர்களை அவர் தம் பகையை அழிக்கவல்லமை உடையவனை

மாயனை-மாயம் வல்லவனை

பாடு-பாடுவோமாக, எழுந்து வருக. தொகுப்புரை

தோழியர்- ஏடி தொழி! இன்னுமா உறங்குகிறாய்?

தலைவி- காது துளைக்க இரைச்சல் இடாதீர்; இதோ புறப்படுகின்றேன்’ ’

தோழியர்- நீ பேசுவதில்தான் கெட்டிக்காரி; முன்பே உன் பேச்சை நாங்கள் அறிவோம்.'

தலைவி- நீங்களோ நானோ யார் கெட்டிக்காரர்? எப்படியாவது இருந்து போகட்டும்'

தோழியர்- விரைவில் நீ எழுந்து வருக; உனக்கு ஏன் தனிமை?’ ’

தலைவி- எல்லாரும் புறப்பட்டுவிட்டார்களா?' '

தோழியர்- சென்றுவிட்டனர்; போய்விட்டதாக எண்ணிக்கொள்:

தோழியர்- நாரணனைப் பாடுவோம் வா; எழுக. ’ விளக்கவுரை

எல்லே’ என்பது தோழியை அழைக்கும் விளி;

எலுவ என்று சங்க இலக்கியத்தில் ஒரு தொடர் இடம் பெற்றுள்ளது; தோழன் என்பது பொருளாம்.