பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 63

எல்லே-விளக்கம் உடையவளே என்பது சொல்லின் பொருளாகும்.

இப்பொழுதும் எலே’ என்ற சொல்வழக்கு உள்ளது காண்க. இது இளையவரை அழைக்கும் விளியாக உள்ளது.

சில்லென்று அழையேன்மின்- நீர் அழைப்பது மிக்க குளிர்ச்சி உடைய தண்ணிரைக் கொட்டுவதுபோல இருக் கிறது' என்பதாம்.

அழையேல்-எதிர்மறை; ஏல்-எதிர்மறைவிகுதி. அழையேல்மின் - முன்னிலைப் பன்மை எதிர்மறை வினைமுற்று.

போதரு-ஒரே சொல், போதலைத் தருதல் என்பதன் இணைப்புச்சொல்.

வல்லை-வல்லவள் நீ முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று.

கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும் எனக் கூட்டுக. நாவுடையாய் என்று முன்னர்க் கூறியதைக் காண்க. (செய்யுள்-14)

ஒல்லை-விரைவாக. வேறு உடைமை-தனித்து வர எண்ணுதல்.

வல் ஆனை கொன்றது-கம்சன் அரண்மனை வாயிலில் நிறுத்தி வைத்த குவலயாபீடம் என்னும் யானையைக் கண்ணன் கொன்றான் என்பது கதை.

மாற்று அழிக்கவல்லான்-அந்த ஆற்றல் என்றும் நிலைத்துள்ளது என்பதாம். மாற்று-பகை.

வல்லானை கொன்றான்; மாற்றாரை மாற்றழிக்க வல்லான்-இவை நாரணனைப் புகழ்ந்து பாடுதல்

ытLDтбо60 ;