பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

உார்வு மிக்க கவிதைகளைப் படைத்தனர்; மடலேறுவேன் என்று கூறிப் பாடும் பாடல்கள் கண்ணன் மாட்டுக்கொண்ட காதலை வெளிப்படுத்துகின்றன.

நாச்சியார் திருமொழி வேங்கடவனுக்குத் தன்னை விதிக்கும்படி மன்மதனை வேண்டும் பாடல்கள் கொண்டவை. அவர்கள் பாடிய பாடல்களுள் மிகச் சிறப்பான ஒன்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவள வாய்தான் தித்திருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் 冷

நாறறமும விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே’’

என்று பாடும் பாடல் நம் உள்ளத்தைத் தொடுகிறது.

'அவன் பவளவாய்; அதன் சுவை சங்குக்குத் தான் தெரியும்; அதனை எனக்குச் சொல்வாயாக’’ என்று கேட் கிறாள் தலைவி.

இத்தகைய காதற்பாட்டுகள் பல நாச்சியார் திரு. மொழியில் இடம் பெற்றுள்ளன. அதே காதல் உணர்வைத் தான் திருப்பாவை வெளிப்படுத்துகிறது என்று பலர் தவறாகக் கருதக்கூடும்; இது முற்றிலும் மாறுபட்டு இறை வனைப் பற்றிப் பாடும் துதிப்பாடல்களாகவே விளங்குவது இதன் தனிச்சிறப்பு ஆகும்.

நாச்சியார் திருமொழி காதற்சுவை மிக்க பாடல்கள் பெற்றிருந்தும் திருப்பாவையே போற்றிப் படிக்கும் பாமாலை யாக விளங்குகிறது. காரணம் என்ன? : நாடு வாழ மக்கள் வாழ இறைவனை வேண்டுகின்றார். மழை பொழிக!