பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 71

மெத்து என்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி-மெதுவான பஞ்சு அணை மீது சயனித்து,

கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா-நப்பின்னையை மார்பாரத் தழுவிக்கொண்டு உறங்கும் கண்ணனே!

வாய் திறவாய்-பேசாமல் இருக்கிறாயே! வாய் திறக்கக் கூடாதா? மைத்தடங் கண்ணினாய்-மை பூசிய அகன்ற கண்களை உடையவளே நீ உன் மணாளனை எத்தனை போதும்-நீ உன்

கணவனைச் சிறிது பொழுதும். துயில் எழ ஒட்டாய்-தூக்கத்தை விட்டு எழ அனு

மதிக்கமாட்டாய். எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்-சிறிதும் பிரிதல் இயலாமல் இருக்கின்றாய்; தத்துவம் அன்று-இது நல்லது அன்று. தகவு-ஏற்றதும் அன்று:

தொகுப்புரை

கட்டிலில் நப்பின்னையை அணைத்துக் கொண்டு உறங் கும் மார்பினை உடையவனே! நீ ஏதும் பேசாமல் இருக் கிறாய்.

பேரழகியே! நீ உன் கணவனை எழுப்பத் தயங்குகிறாய்; பிரிவைத் தாங்கும் ஆற்றல் உனக்கு இல்லை, இது நியாய மாகப் படவில்லை; ஏற்கத் தக்கதும் அன்று.

விளக்கவுரை

இங்கே நப்பின்னையின் கட்டில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டுக்கால் கட்டில் எனக் கூறப்பட்டது. கோடுயானைத் தந்தம்.