பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ராசி

நப்பின்னை நங்காய்- நப்பின்னை பிராட்டியே!

திருவே துயில் எழாய்-திருமகளே! துயில் எழுக; உக்கமும் தட்டொளியும் தந்து-விசிறியும் கண்ணாடியும் தந்து அனுப்பி உன் மணாளனை இப்போதே-உன் கணவனை இப் பொழுதே

எம்மை நீராட்டு-எம்மை நீராட வைப்பாயாக

தொகுப்புரை

முப்பத்து மூன்று கோடி தேவர்க்கு முற்பட்டுச் சென்று அவர்தம் நடுக்கத்தைத் தீர்க்கும் பெருமையனே துயில் எழுக. செப்பம், திறல், பகைவரை அழிக்கும் மேன்மை இவற்றை உடையவனே துயில் எழுக; நப்பின்னை நங்காய்! விசிறியும் கண்ணாடியும் தந்து அனுப்பி எம்மை நீராட்ட அனுப்புவாயாக.

விளக்கவுரை

முப்பத்து மூன்று வகையினர்-அட்ட வசுக்கள் எண்மர்; ருத்திரர் பதினொருவர்; துவாதச ஆதித்தியர் பன்னிருவர்; அசுவனி தேவதைகள் இருவர் ஆக முப்பத்து மூன்று பேர்; அவர்கள் இனம் ஒவ்வொன்றும் ஒரு கோடியினர் எனக் கூறப் படுகிறது.

கப்பம்-கம்பம் என்பது எதுகை நோக்கிக் கப்பம்

எனத் திரிந்தது

கம்பம்-நடுக்கம்;

கலி-துள்ளுதல்; மிடுக்கு; பெருமை.

செப்பு-செம்பொன்-இங்குக் குடத்தை உணர்த்தியது.

உக்கம்-விசிறியை உணர்த்தும் வழக்காற்றுச் சொல்.

தட்டு ஒளி-ஒளித்தட்டு என மாற்றுக; ஒளியை உடைய

தட்டு, அது கண்ணாடியாகும்.