பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 75

நீராட்டு-நீராடச் செய்க;-பிறவினை; நீராடுதலே பாவை நோன்பின் அடிப்படை, அதற்குக்

கண்ணனிடம் பறை கேட்பதோடு அவ்விழாவிற்கு உக்கம்

(விசிறி) , தட்டொளி (கண்ணாடி) இவற்றையும் பெறவிழை

கின்றனர் என்பதாம்.

அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! செப்பம் உடையாய்! திறல் உடையாய்! விமலா ! இவை

இறைவனைப் பற்றிய விளிகள். பாமாலைப் பகுதி.

21 ஏற்ற கலங்கள் (போற்றி வந்தோம் எனல்)

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்: ஊற்றமுடை யாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்: மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் னடிபணியுமா போலே போற்றியாம் வநதோம். புகழ்ந்தேலோ

ரெம்பாவாய்.

பதவுரை

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப-தாங்கிய பாத் திரங்கள் நிறைந்து வழியும்படி மிகுதியாக அளிக்கும். வள்ளல் பெரும் பசுக்கள்-மிக்க வள்ளன்மை மிக்க வள மான பசுக்களை, ஆற்றப் படைத்தான் மகனே-மிகுதியாகப் படைத்த

வனின் திருக்குமரனே! அறிவுறாய்-விழித்து எழுக;