பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 77

இவர்கள் அவன்தான் தலைவன் என்று ஒப்புக்கொண்டு அதனால் அவன் பெருமைகளை அறிந்து உணர்ந்து அன்பு கொள்கின்றனர் என்பதே பொருந்தும்.

பகைவர் புகழ்கின்றார்கள் உன் பெருமை அறிந்து: அன்பர்கள் யாமும் புகழ்வோம் உன் பெருமை உணர்ந்து' என்பதாம்.

ஆற்றப்படைத்தான் மகனே! ஊற்றம் உடையாய்! பெரியாய்! சுடரே! இவை இறைவனைப் போற்றும் வாசகங்கள்-பாமாலைப் பகுதிகள்.

22. அங்கண்மா ஞாலத் தரசர் (பாவங்களை நீக்குக எனல்) அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழ் சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் அங்க ணிரண்டும் கொண்டு எங்கள்மேல்

நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

அங்கண்மா ஞாலத்து அரசர் - அழகிய இடம் அகன்ற பெரிய உலகத்து அரசர் அபிமான பங்கமாய்-தங்கள் ஆணவம் அடங்கப்பெற்: நின் பள்ளிக்கட்டின் கீழ்-உன்னுடைய கட்டிலின் கீழ் சங்கம் இருப்பார் போல்-கூட்டமாக வந்த இருப்ப

வரைப் போல். வந்து தலைப் பெய்தோம் - நாங்களும் வந்து

அணுகியுள்ளோம்;